களத்தடுப்பை தெரிவுசெய்தது இலங்கை

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

போட்டியில் நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானத்துள்ளது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடும் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட்டுக்களை பறிக்கொடுத்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.

ஆரம்பத்திலே அதிரடி காட்டி வருகின்ற இலங்கை பந்துவீச்சு சார்பாக சுரங்க லக்மால் இரண்டு விக்கெட்டுகளை பெற்றுள்ளார்.

முதலாவது டெஸ்ட்போட்டியில் விளையாடிய அதே இலங்கை கிரிக்கெட் அணி இப்போட்டியிலும் களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

x