ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து திசர பெரேரா சாதனை

இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் முதல் முதலில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த சாதனையினை சகலத்துறை ஆட்டகாரரான திசர பெரேரா படைத்துள்ளார்.

நேற்று Army Cricket Club மற்றும் Bloomfield Cricket and Athletic Club கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் குறித்த சாதனையினை அவர் நிகழ்த்தியுள்ளார்.

அத்துடன் A தர கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது வேகமான அரைசதம் கடந்த வீரராக அவரின் பெயரை பதிவு செய்துள்ளார்.

மழைக்காரணமாக 41 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாள் போட்டியில் கடைசி 20 பந்துகள் மீதமுள்ள நிலையில் களமிறங்கிய திசேர பெரேரா, 13 பந்துகளுக்கு முகங்கொடுத்து 8 சிக்ஸர்களுடன் அரைசதம் கடந்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய Army Cricket Club அணி 41 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை பறிக்கொடுத்து 318 ஓட்டங்களை பெற்றது. Army Cricket Club அணிச்சார்பாக ஆஷன் ரண்டிக 124 ஓட்டங்களும், ஹிமாஷா லியானகே ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தனர்.

319 என்ற வெற்றியிலக்கை அடைய களமிறங்கிய Bloomfield Cricket and Athletic Club கிரிக்கெட் அணி 17 ஓவர்கள் முடிவில் 73 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிக்கொடுத்து இருந்த வேளையில் மழைக் காரணமாக குறித்த போட்டி இறுதியில் வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

 

x