இந்திய அணியை எளிதாக வீழ்த்தியது இங்கிலாந்து – ரன்களை வாரி வழங்கிய குல்தீப், குர்ணால் பாண்ட்யா

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி புனேயில் இன்று  26-ந் தேதி பகல்-இரவு ஆட்டமாக தொடங்கியது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 336 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 108 ரன்களும் ரிஷப் பண்ட் 77 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. 43.3 ஓவரில் 337 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை எளிதாக வீழ்த்தியது. 
இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஸ்டோக்சின் அதிரடியான ஆட்டமே இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாகும். அதிகபட்சமாக ஜேசன் ராய் 55, ஜானி பேர்ஸ்டோ 124, ஸ்டோக்ஸ் 99 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து அணியின் மொத்த சிக்சர் எண்ணிக்கை 20 ஆகும். அதில் ஜானி பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் ஆகிய 2-பேரும் சேர்ந்து 17 சிக்சர்களை அடித்துள்ளனர். இந்திய அணி மொத்தமாகவே 17 சிக்சர்கள் மட்டுமே அடித்திருந்தது.
இந்நிலையில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர்.
x