சேப்பாக்கம் 2-வது டெஸ்ட் இந்தியா டாஸ் வென்று 3 மாற்றங்களுடன் பேட்டிங் தேர்வு

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

2-வது டெஸ்ட் போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், பும்ரா, ஷாபாஸ் நதீம் நீக்கப்பட்டு முகமது சிரஜ், குல்தீப் யாதவ், அக்சார் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணியில் பென் போக்ஸ், மொயீன் அலி, ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ஸ்டோன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து அணி

இந்திய அணி விவரம்:-

1. ரோகித் சர்மா, 2. ஷுப்மான் கில், 3. புஜாரா, 4. விராட் கோலி, 5. ரஹானே, 6. ரிஷப் பண்ட், 7. அக்சார் பட்டேல், 8. அஷ்வின், 9. குல்தீப் யாதவ், 10. இஷாந்த் சர்மா, 11. முகமது சிராஜ்.

இங்கிலாந்து அணி:-

1. ரோரி பேர்ன்ஸ், 2. டொமினிக் சிப்லி,  3. டேனியல் லாரன்ஸ், 4. ஜோ ரூட், 5. பென் ஸ்டோக்ஸ், 6. ஒல்லி போப், 7. பென் போக்ஸ், 8. மொயீன் அலி, 9. ஸ்டூவர்ட் பிராட், 10. ஜேக் லீச், 11. ஒல்லி ஸ்டோன்

x