லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இரு நாடுகளும் எல்லை முழுவதும் படைகளை குவித்துள்ளன.
போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை நடைபெற்ற போது இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வைத்துள்ளது. இதனால், இந்திய-சீன எல்லையில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
பதற்றம் தொடர்ந்து நீடித்து வருவதால் இந்திய ராணுவத்தின் சிறப்பு படையினரும், விமானப்படையின் சிறப்பு பிரிவினரும் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, பிடிபட்ட சீன வீரரிடம் இந்திய ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் சீன வீரர் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்தது தெரியவந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக சீன பாதுகாப்பு படையினருக்கு இந்திய படையினர் தகவல் கொடுத்தனர். வீரரை சீனாவிடம் ஒப்படைக்கும் நடைமுறைகளை இந்திய படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
லடாக் எல்லையில், சீன வீரர் இந்திய படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.