அருணாசல பிரதேசத்தில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா பரவல் சரிந்து வருகிறது. சில குறிப்பிட்ட மாநிலங்களை தவிர, பிற மாநிலங்கள் இந்த வைரசின் பிடியில் இருந்து படிப்படியாக மீண்டு வருகின்றன. இந்த வரிசையில் அருணாசல பிரதேசமும் கொரோனாவை தொடர்ந்து வென்று வருகிறது.

அங்கு நேற்றைய கணக்கெடுப்பின்போது யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் அங்கு ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த 16,719 பேர் என்ற நிலையே நேற்றும் தொடர்ந்தது.

இதில் 16,566 பேர் குணமடைந்து விட்டனர். இது 99.08 சதவீதம் ஆகும். நேற்று 2 பேர் குணமடைந்ததை தொடர்ந்து 97 பேர் மட்டுமே சிகிச்சையில் இருக்கிறார்கள். அதேநேரம் மாநிலத்தில் இதுவரை 56 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவி இருக்கின்றனர். இது 0.33 சதவீதம் ஆகும்.

அருணாசல பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடந்த 213 பரிசோதனைகள் உள்பட 3 லட்சத்து 78 ஆயிரத்து 364 பரிசோதனைகள் நடந்திருப்பதாக மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

x