ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாட்டத்தில் அஜாடி கிராமம் படர் நல்ஹா என்ற பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் இன்று காலை வழக்கம்போல இந்திய எல்லைபாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை ஒரு சிறுவன் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.
Related Posts
சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பண்டி-அப்பாஸ்பூர் கிராமத்தை சேர்ந்த அலி ஹைதர் (14 வயது) என்பது தெரியவந்தது.
மேலும், அந்த சிறுவன் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுவனுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்த இந்திய படையினர் சிறுவனை பாகிஸ்தான் தரப்பிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
Prev Post