டெல்லி போராட்டக்களத்தில் வெங்காய சாகுபடியை தொடங்கிய விவசாயிகள்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைப் பகுதிகளில் 32வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு குழுவினர் டெல்லி புராரி மைதானத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், புராரி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் தேவைக்கு அந்த மைதானத்திலேயே வெங்காய சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மைதானத்தின் ஒரு பகுதியில், வெங்காய நாற்றுகளை நடவு செய்துள்ளனர். அதற்கு தேவையான தண்ணீரை தெளிக்கின்றனர்.

ஒரு மாத காலமாக விவசாயம் செய்யாமல் இருப்பதால், தங்களது சமையல் தேவைக்காக மைதானத்தில் வெங்காய சாகுபடி செய்திருப்பதாகவும், மேலும் சில பயிர்களை பயிரிட திட்டமிட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

x