விவசாயிகளை குழப்ப டெல்லியைச் சுற்றி ஒரு சதி நடந்து வருகிறது

குஜராத் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

விவசாயிகளை குழப்ப டெல்லியைச் சுற்றி ஒரு சதி நடந்து வருகிறது. புதிய வேளாண் சீர்திருத்தங்களுக்குப் பிறகு விவசாயிகளின் நிலம் மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்படும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். பால் பண்ணை வைத்திருப்பவர்கள் உங்களிடமிருந்து பால் எடுத்துக் கொள்ள ஒப்பந்தம் போட்டிருந்தால், அவர்கள் உங்கள் கால்நடைகளையும் எடுத்துச் செல்கிறார்களா?

எதிர்க்கட்சியில் அமர்ந்து விவசாயிகளை இன்று தவறாக வழிநடத்தும் இவர்கள், அவர்களுடைய ஆட்சியில் வேளாண் சீர்திருத்தத்திற்கு ஆதரவாக இருந்தனர். அவர்கள் ஆட்சிக்காலத்தில் முடிவுகள் எடுக்கப்படவில்லை. இன்று வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை எடுக்கும்போது, அவர்கள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள்.

நடந்துள்ள விவசாய சீர்திருத்தங்கள் பல ஆண்டுகளாக உழவர் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் கூட எதைக் கேட்டார்களோ? அதை சரியாக கொண்டுள்ளது. இந்திய அரசு எப்போதும் விவசாயிகள் நலனில் உறுதியாக உள்ளது. மேலும், அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வோம் என விவசாயிகளுக்கு உறுதியளிக்கிறோம்’’ என்றார்.