இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

இந்திய குடியரசு தினம் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம்.
அந்த வகையில், இந்தியாவின் 72-வது அடுத்த குடியரசு தின விழா 2021 ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்திய பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து போரிஸ் ஜான்சன் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வர உள்ளார் என இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் ராப் இன்று தெரிவித்துள்ளார்.
2021-ம் ஆண்டு குடியரசு தினம் கொரோனா தடுப்பு வழிகாட்டு விதிகளை பின்பற்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.