ரிசர்வ் வங்கி துவங்கிய நித்தியானந்தா: கரன்சியும் தயார்

பல சர்ச்சைகளிலும், வழக்குகளிலும் சிக்கியுள்ள நித்தியானந்தா சமீபத்தில் கைலாஷா என்ற தனி நாட்டினை துவங்கியுள்ளதாக யூடியூப் வாயிலாக தகவல் வெளியிட்டார்.

கடந்த விநாயகர் சதுர்த்தி நாளன்று கைலாஷா ரிசர்வ் வங்கி துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டார். அதற்கான கைலாஷா கரன்சியும் வெளியிடப்பட்டுள்ளது.

தன்னுடைய இணைய பக்கத்தில். இது இந்துக்கள் மட்டுமே வாழும் கைலாஷா நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கைலாஷா நாட்டின் 300 பக்க பொருளாதார கொள்கைகளை வெளியிட்டுள்ளார். மற்றொரு நாட்டுடன் தன்னுடைய வங்கி தொடர்பாக புரிதல் ஒப்பந்தமும் செய்துள்ளார்.