ஜம்மு-காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்புப்படையினர் உள்ளூர் போலீசாருடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று ஜம்மு-காஷ்மீர் பாம்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது, உள்ளூர் போலீசார் உதவியுடன் அவர்கள் பதுங்கி இருந்த இடத்தை வீரர்கள் முற்றுகையிட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இன்னும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
x