100 பேருடன் சென்ற படகு கங்கை ஆற்றில் கவிழ்ந்தது- மீட்பு பணி தீவிரம்

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் நவுகாச்சியா பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் படகில் பயணித்த சுமார் 100 பேரும் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதிய நிலவரப்படி 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆற்றில் விழுந்த பலரது நிலை என்ன ஆனது? என்று தெரியவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

x