ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா பாதிப்பு!

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் உள்ள அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அசோக் கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் பிரச்சனை இல்லை என்றும், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அசோக் கெலாட் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, இரு தினங்களுக்கு முன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.