அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகள் 2 நாட்கள் மூடல் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பெரும்பாலான பக்தர்கள் நடைபயணமாக சென்று வருகிறார்கள். அவர்கள் திருமலை அடிவாரத்தில் இருந்து அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகள் வழியாக திருமலைக்கு செல்வார்கள்.

தற்போது புயல் காரணமாக ஆந்திராவில் பலத்த மழைபெய்து வருவதால் நடைபாதையில் தண்ணீர் செல்கிறது. இதனால் பக்தர்களின் நலன்கருதி இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகள் மூடப்படுவதாகவும், பக்தர்கள் ஒத்துழைக்குமாறும் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.