பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டும் உத்தரவுக்கு கேரளா தடை

சமீபத்திய ஆண்டுகளில் சீனா தனது இராணுவத்தை பெருமளவில் மேம்படுத்தியுள்ளது. மேலும் தென் சீனக் கடல், தைவான் மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் இராணுவ மேலாதிக்க திறன் மற்றும் நோக்கங்கள் அமெரிக்காவை கவலையடைய செய்து உள்ளது.

கொலராடோவை தளமாகக் கொண்ட செயற்கைக்கோள் பட நிறுவனமான மேக்சர் டெக்னாலஜிஸ் எடுத்த செயற்கை கோள் படங்களில் சீனா அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மற்றும் அணுயுத கப்பல்களை உருவாக்கி அதனை சோத்னை முயற்சி செய்து உள்ளது. இந்த கப்பல்களின் வெளிப்புறங்களைக் அந்த வரைபடங்கள் காட்டுகின்றன. இது வடமேற்கு சின்ஜியாங் பகுதியில் உள்ள தக்லமாகன் பாலைவன மாவட்டமான ருயோகியாங் என என மேக்சர் அடையாளம் கண்டுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் , இந்த செயற்கைகோள் படங்களைப் பற்றி தனக்கு எந்த தகவலும் இல்லை என்று கூறினார்,. மேலும் ங்கள் குறிப்பிட்டுள்ள நிலைமை பற்றி எனக்குத் தெரியாது என கூறினார்.

சீனாவின் இந்த இராணுவ மேம்படுத்தல், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் கடற்படைப் படைகளை எதிர்கொள்வதை சுட்டிக்காட்டுகிறது.