தீபாவளி பண்டிகை இந்தியா-பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்!

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதுபோல இந்தியா, பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் பர்மரில் இந்தியா,பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடினர். இரு நாட்டு ராணுவ வீரர்களும் தீபாவளி வாழ்த்துகளை பரிமாறி கொண்டும், இனிப்புகளை வழங்கியும் தீபாவளி கொண்டாடினார்கள்.

இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை சார்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

“தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகளில் இதுபோன்ற இனிப்புகள் மற்றும் வாழ்த்துகள் பரிமாற்றம் பரஸ்பர நல்லிணக்கம், சகோதரத்துவத்தை மேம்படுத்துவதோடு, இரு எல்லை பாதுகாப்பு படைகளுக்கு இடையே நட்பு மற்றும் அமைதியான சூழ்நிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது,” என்று கூறப்பட்டு இருந்தது.