தீபாவளி பண்டிகை எதிரொலி டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு தீபாவளிக்கும் மிகப்பெரிய கவலையாக காற்று மாசு பிரச்சினை உருவெடுத்து வருகிறது.

தலைநகர் டெல்லியில் இன்று பிற்பகல் நிலவரப்படி காற்று மாசு காற்றின் தரக் குறியீடு 339 என்ற அளவில் அதிகரித்துள்ளதாக காற்று தர கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்தடுத்த நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை ஓட்டி வெடிக்கப்படும் பட்டாசுகளால் டெல்லியில் காற்று மாசின் அளவு காற்றின் தரக் குறியீடு 339 என்ற அளவில் அதிகரித்துள்ளதாக காற்று தர கண்காணிப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி காற்று மாசு அளவு 341ஆக பதிவாகியுள்ளது. காற்று மாசு சராசரியாக 303 என்கிற அளவில் பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்று மாசு பூஜ்ஜியத்திற்கும் காற்றின் தரக் குறியீடு 50க்கும் இடையில் இருந்தால் ‘நல்லது’, 51 மற்றும் 100 ‘திருப்திகரமானது’, 101 மற்றும் 200 ‘மிதமானது’, 201 மற்றும் 300 ‘மோசம்’, 301 மற்றும் 400 ‘மிகவும் மோசமானது’ மற்றும் 401 மற்றும் 500 ‘கடுமையானது’ எனக் கருதப்படுகிறது.