பஞ்சாப் லோக் காங்கிரஸ் – அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடக்கம்

நவ்ஜோத் சிங் சித்துவுடனான மோதலை தொடர்ந்து கடந்த 18-ம் திகதி பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பதவியில் இருந்து அம்ரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். தனது எதிர்ப்பையும் மீறி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் தலைமை நியமித்தது.

இதன் காரணமாக காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பஞ்சாப் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த அம்ரீந்தர் சிங், புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில், அம்ரீந்தர் சிங் தனது புதிய கட்சி இன்று அறிவித்தார். ’பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்ற பெயரில் அம்ரீந்தர் சிங் தனது புதிய கட்சியை தொடங்கியுள்ளார். புதிய கட்சி தொடங்குவதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதற்கான ராஜினாமா கடிதத்தை அம்ரீந்தர் சிங் காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

புதிய கட்சி தொடங்கியுள்ள அமரீந்தர் சிங் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் 117 இடங்களிலும் போட்டியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.