இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான “நீட் தேர்வு” முடிவுகள் வெளியீடு

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு, செப்டம்பர் 12-ம் திகதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தத் தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் எழுதியிருந்தனர்.

இந்த தேர்வின் முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை அனுப்பியுள்ளது.