கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களாவில் சாலை தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் ஓசூர் திமுக எம்.எல்.ஏ. பிரகாஷின் மகன் கருணா சாகர் என்பவரும் உயிரிழந்தார். இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.