நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன் டெல்லி சென்று பா.ஜனதாவில் சேர்ந்தார். அதன்பின் சென்னை திரும்பினார்.
சென்னையில் பேட்டியளித்த நடிகை குஷ்பு, காங்கிரஸ் மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் என விமர்சனம் செய்திருந்தார்.
Related Posts
மூளை வளர்ச்சி இல்லாத என்ற வார்த்தையை பயன்படுத்தியதால், மாற்றுத்திறனாளிகள் அமைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
இந்நிலையில் தனது பேச்சுக்கு குஷ்பு வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குஷ்பு தெரிவிக்கையில் ‘‘ஆழ்ந்த துயரம், வேதனை, அவசரத்தின் ஒரு கணத்தில் 2 சொற்றொடர்களை தவறாக பயன்படுத்தி விட்டேன். மனஉளைச்சல், கவனக்குறைாவல் செய்ததை இனிமேல் ஒருபோதும் செய்யமாட்டேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.