இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் நவம்பர் வரை நீட்டிப்பு

மத்திய மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படலாம் என்று பரவலாக பேசப்படும் நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கொரோனா நிலவரம், நோய்த்தடுப்பு பணிகள் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

80 கோடி மக்கள் பயனடையும் வண்ணம் இலவச உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டத்தை தீபாவளி பண்டிகை வரை நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி, தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு மாதம் 5 கிலோ இலவச தானியங்கள் வழங்கும் திட்டத்தை, ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை நீட்டிக்க மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.