கொரோனா இரண்டாவது அலையில் இதுவரை 646 டாக்டர்கள் மரணம்- டெல்லியில் அதிகம்

கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது தொற்று குறைந்தபோதிலும், உயிரிழப்புகள் கவலை அளிப்பதாக உள்ளன. முதல் அலையின்போது இருந்ததைவிட இரண்டாம் அலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள் பிற முன்களப் பணியாளர்கள் அதிக அளவில் பலியாகின்றனர்.

கொரோனா இரண்டாவது அலையின்போது பாதிக்கப்பட்ட முன்களப் பணியாளர்களில் இதுவரை 646 டாக்டர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் கூறி உள்ளது.

அதிகபட்சமாக டெல்லியில் 109 டாக்டர்கள் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். பீகாரில் 97 பேரும், உத்தர பிரதேசத்தில் 79 பேரும், ராஜஸ்தானில் 43 பேரும் . தமிழகத்தில் 32 டாக்டர்கள் இறந்துள்ளனர்.

x