சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலையில் மிகப் பெரிய அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. இதனை தொடா்ந்து 12-ம் வகுப்பு சி பி எஸ் சி பொதுத்தேர்வை நடத்த வேண்டாம் என கோரிக்கை எழுந்தது.

இன்று மாலை பிரதமர் மோடியின் தலைமையில் அமைச்சரவை கூடியது. இதில் சி பி எஸ் சி 12-ம் வகுப்பு தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கொரோனா தொற்று காரணமாக சி பி எஸ் சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

பிரதமர் மோடி இதுகுறித்து கூறுகையில் ‘‘மாணவர்களின் உடல்நிலை, பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது. மாணவர்கள் நலன்கருதி தேர்வு ரத்து. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் எழுந்த பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளது’’ என்றார்.