சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க முடியாது -டெல்லி உயர் நீதிமன்றம்

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிடம் மற்றும் அதைச்சுற்றி அமைக்கப்படும் அரசு அலுவலங்கள், பிரதமர் இல்லம் ஆகியவை கொண்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்தி வைக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது, அத்தியாவசியமானது எனக் கூறி, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
டெல்லி உயர் நீதிமன்றம்
அத்துடன், பொதுநல நோக்கத்துடன் மனுதாரர்கள் வழக்கு தொடரவில்லை எனத் தெரிவித்த நீதிமன்றம், வழக்கு தொடர்ந்த மனுதாரர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.