கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி பாதுகாப்பானது – ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் தடுப்பூசி, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பானதுதான் என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.

மகளிர் மற்றும் மகப்பேறு பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.

இந்த ஆய்வை நடத்திய நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் பீன்பெர்க் மருத்துவக்கல்லூரி உதவிப் பேராசிரியர் ஜெப்ரி கோல்டுஸ்டீன் இதுபற்றி கூறுகையில், “கர்ப்பிணிக்கு நஞ்சுக்கொடி என்பது விமானத்தின் கருப்பு பெட்டி போன்றது. கர்ப்பத்தில் ஏதேனும் தவறு நடந்தால் என்ன நடந்தது என்று கண்டறிய நாங்கள் நஞ்சுக்கொடியின் மாற்றங்களைத்தான் ஆராய்வோம். கொரோனா வைரஸ் தடுப்பூசியை பொறுத்தமட்டில் இது கர்ப்பிணி பெண்களின் நஞ்சுக்கொடியை சேதப்படுத்தாது” என குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பிணி பெண்களிடம் தடுப்பூசி தொடர்பாக நிறைய தயக்கம் இருப்பதாகவும், தங்களது ஆய்வுத்தரவுகள் ஆரம்ப கட்ட தகவல்களாக இருந்தபோதும், கர்ப்ப காலத்தில் தடுப்பூசி ஆபத்து குறித்த கவலையை குறைக்கும் என்றும் கூறி உள்ளார்.

x