பாரத் பயோடெக் நிறுவனமும் தடுப்பூசி விலையை குறைத்தது

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா கோவிஷீல்டு என்ற பெயரிலும், பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற பெயரிலும் தடுப்பூசி டோஸ்களை தயாரித்து வழங்குகிறது.
இரண்டு நிறுவனங்களும் மாநிலங்களுக்கு வழங்கும் டோஸ்க்கான விலையை அதிரடியாக உயர்த்தியது. ஒரு டோஸ்க்கான விலையை சீரம் 400 ரூபாயாகவும், பாரத் பயோடெக் 600 ரூபாயாகவும் உயர்த்தியது.
மாநில அரசுகள் மத்திய அரசிடம் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியது. மத்திய அரசு இரண்டு நிறுவனங்களிடமும் விலையை குறைக்க கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.
பாரத் பயோ டெக்
இதன்காரணமாக நேரம் சீரம் நிறுவனம் மாநிலங்களுக்கு வழங்கும் கோவிஷீல்டின் விலையை 400 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக குறைத்தது.
இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் 600 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக குறைத்துள்ளது.
x