வேட்பாளரின் மனைவி கொரோனாவுக்குப் பலி: தேர்தல் துணை ஆணையர் மீது போலீசில் புகார்

மேற்கு வங்காளம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில் மேற்கு வங்காளம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிரிக்க தேர்தல் ஆணையமும் முக்கிய காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சுமத்தியிருந்தது. இதை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் வரவேற்றிருந்தார்.

இந்த நிலையில், மேற்கு வங்காளம் கர்தாஹா தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் காஜல் சின்ஹா களம் இறங்கியுள்ளார். இவரது மனைவி நந்திதா சின்ஹா. இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில் வேட்பாளர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை இந்த கொரோனா தொற்றில் இருந்து உறுதிப்படுத்தவில்லை என துணை தேர்தல் கமிஷனர் சுதிப் ஜெய்ன் மற்றும் அதிகாரிகள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

x