திடீரென உடைந்த பனிப்பாறைகள்- பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம்  சமோலி மாவட்டம் சும்னா கிராமத்தில் உள்ள இந்தியா-சீனா எல்லை பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. மழையும் பெய்கிறது. இந்நிலையில், அங்கு நேற்று பனிப்பாறைகள் உடைந்து விழுந்ததால் பனிச்சரிவு ஏற்பட்டது.
இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். அதே போல் சாலை கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களும் வெளியேற முடியாமல் சிக்கினர். இதையடுத்து அங்கு மீட்புப் பணிகளை ராணுவத்தினர் மேற்கொண்டனர்.
மீட்பு பணி
பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் வேகமாக ஈடுபட்டனர். இதில் 384 எல்லை பாதுகாப்பு படை வீரர்களை மீட்டனர். 7 பேர் பலத்த காயமடைந்திருந்ததால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 8 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.
இதுகுறித்து உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத், மந்திரி தான் சிங் ராவத் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதியை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டனர்.
x