இந்திய பெருங்கடல் எல்லையை கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது

இஸ்ரோ இன்று பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் மூலம் 19 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது. இதில் டிஆர்டிஓ இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய சிந்து நேத்ரா கண்காணிப்பு செயற்கைக்கோளும் ஒன்று. இந்த செயற்கைக்கோள் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் இந்திய பெருங்கடலில் போர்க்கப்பல், சரக்கு கப்பல் ஆகியவற்றின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணித்து தகவல் தெரிவிக்கும். இந்த செயற்கைக்கோளை தரையில் இருந்து தொடர்பு கொண்டு இயக்க முடியும்.
தேவைப்பட்டால் பிரச்சனைக்குரிய தென் சீன கடற்கரை அல்லது கொள்ளையர்களால் மிகவும் பாதிக்கப்படும் வளைகுடா கடற்பகுதியையும் காண்காணிக்க முடியும் அதேபோல் சீனா, பாகிஸ்தான் எல்லையை கூட கண்காணிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
x