கற்பழித்தவரின் பெயரை கையில் பச்சைக் குத்தியதால், ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

டெல்லி உயர்நீதிமன்றத்தில் திருமணமான பெண் ஒருவர் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அதில் 2016-ல் இருந்து 2019-ம் ஆண்டு வரை நபர் ஒருவர் தன்னை வலுக்கட்டாயமாக மிரட்டி கற்பழித்ததுடன், தனது கையில் அவனது பெயரை பச்சைக் குத்த வற்புறுத்தினார் என அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்தவழக்கு விசாரணையின்போது நீதிபதி ரஜ்னிஷ் பாத்நகர் ‘‘என்னுடைய கருத்தின்படி பச்சைக் குத்துவதற்கும், கையில் படம் வரைவதற்கும் சிறப்பு மெஷின் தேவை. மேலும், பச்சைக்குத்தப்படும் நபரின் எதிர்ப்பு இருந்தால், அவரது கையில் பச்சைக்குத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. இது எல்லோருடைய வேலையும் கிடையாது. பச்சைக்குத்தும் தொழில் தொடர்பாக வழக்கு தொடர்ந்தவருக்கு தொடர்பு இருப்பதாக அவரது வழக்கறிஞரும் கூறவில்லை’’ எனக் கூறினார்.

இதனால் கற்பழித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

குற்றம்சாட்ட நபர் தரப்பில் ‘‘அவர்கள் இருவரும் சம்மதத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவர் மீது அன்பு வைத்திருந்ததனால்தான் கையில் பச்சைக் குத்தினால். அவரை திருணம் செய்ய வற்புறத்தி, அது தோல்வியடைவே, வழக்கு தொடரப்பட்டது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் தரப்பில் அந்த பெண் குற்றம்சாட்டுவதுபோல், அந்த நபரின் போனில் எந்தவிதமான ஆட்சேபிக்கத்தக்க படங்களோ, பதிவோ இல்லை எனக் கூறப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

x