4000 ரூபாய் கேக்கை வெட்டிய சூரி

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. அவர் தன்னுடைய பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். தனக்கு வாழ்த்து தெரிவித்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றியும் கூறினார் சூரி.

நேற்று சூரியின் பிறந்தநாளுக்கு அவருடைய பிள்ளைகள் பிறந்தநாள் கேக் ஒன்றை வாங்கிவந்து அப்பாவை வெட்டச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அந்த கேக்கில் இருந்த வாசகங்கள்தான் சூரியைப் போன்றே அவருடைய பிள்ளைகளும் நகைச்சுவை உணர்வுடன் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

“கேக் செலவு 1500, பெட்ரோல் செலவு 500, டெகரேஷன் செலவு 2000, மொத்தம் 4000, மொத காசை எடுத்து வச்சிட்டு கேக்கை வெட்டு” என எழுதிய கேக்கைக் கொடுத்து அப்பாவை வெட்டச் சொல்லியிருக்கிறார்கள்.

அதுகுறித்து பதிவிட்டுள்ள சூரி, 400ருவா கேக்க கொடுத்துபுட்டு 4000ருவாய புடிங்கிருச்சுங்க நாபெத்த பிள்ளைங்க, இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம். தேங்க்யூ கட்டிபெத்தார்களா,” எனக் கூறியிருக்கிறார்.