வெள்ளை நிற அபூர்வ முள்ளம்பன்றி மீட்பு

வெள்ளை நிறத்திலான அபூர்வ முள்ளம்பன்றி ஒன்று பொறியில் சிக்கிய நிலையில் நேற்று (02) மீட்கப்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டிய கொலன்ன கோப்பவத்த பிரதேசத்தில் தனது தோட்டத்தை மிருகங்கள் பிராணிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக விவசாயி ஒருவர் வைத்த பொறியில் இந்த முள்ளம்பன்றி சிக்கியுள்ளது.

இந்த முள்ளம்பன்றியை அது சிக்கியிருந்த பொறியுடன் விவசாயி உடவளவை சரணாலய அதிகாரிகளிடம் ஒப்படைத்ததையடுத்து முள்ளம்பன்றிக்கு வைத்திய சிகிச்சை வழங்கப்பட்ட பின் சரணாலயத்தினுள் விடப்பட்டதாக உடவளவ சரணாலய பாதுகாப்புக் காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.