டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகத் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் 28,025 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த ஆண்டு செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் 12,916 டெங்கு நோயாளர்கள் மட்டுமே பதிவாகியுள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 1208 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இந்த ஆண்டு 429 நோயாளிகள் மட்டுமே பதிவாகியுள்ளனர்.

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு பரவல் மீண்டும் அதிகரிக்கலாம் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.