மனதில் ஏற்படும் குழப்பங்களிலிருந்து விடுபடுவது எப்படி?

இன்றைய சூழ்நிலையில் இயந்திர உலகில் மூழ்கியிருக்கும் மக்கள் குடும்பத்தவர்களுடனோ அல்லது அயலவர்களுடனோ நேரத்தினை செலவழிக்க தவறுகின்றனர்.

இதனால் அவர்களுக்கு எதுவிதமான ஆறுதல்களும் இன்றி மன ரீதியான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

இவை தவிர வாழ்வில் எதிர்நோக்கும் தோல்விகளும் இவ்வாறான மன ரீதியான பாதிப்புக்களுக்கு வழிகோலுகின்றது.

எனினும் இயந்திர உலகிலும் இப் பிரச்சினைக்கு தீர்வு காண சில வழிமுறைகள் உள்ளன.

அவை பற்றி பார்க்கலாம்,

கிளாஸிக் மியூக் அல்பங்களை கேட்பதன் மூலம் மன அழுத்தம் மற்றும் மனக் குழப்பங்களிலிருந்து விடுபட முடியும்.

அதேபோன்று நாள்தோறும் ஒரு தடவையாவது வீட்டிற்கு வெளியே நடைப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தத்தினை குறைக்க முடியும்.

வாரம் ஒன்றிற்கு 3 அல்லது 4 தடவைகள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

உடற்பயிற்சியானது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மாத்திரமன்றி சிறந்த தூக்கத்தையும் தரவல்லது.

அத்துடன் தன்நம்பிக்கை, செயல்களில் கவனம் செலுத்துதன் என்பனவும் இதன் மூலம் அதிகரிக்கும்.

பாடல்களை பாடுதல்

பாடல்களை கேட்பது மாத்திரமன்றி ஒன்லைனில் உள்ள பின்னணி இசைகளுக்கு ஏற்ப பாடல்களை அவ்வப்போது பாடுவதும் மனதிற்கு ஆறுதலையும், தன்நம்பிக்கையையும் தரவல்லது.

உங்களுக்கு ஏற்றாற்போல் திட்டமிடல்

அன்றாட வாழ்வில் நாள்தோறும் செய்யப்போகும் விடயங்களை பட்டியலிட்டு அதற்கு ஏற்ப செயலாற்றி வருவதனாலும் தேவையில்லாத மன அழத்தங்கள், மன குழப்பங்களை நீக்க முடியும்.

கணினி, தொலைக்காட்சி மற்றும் தொலைபேசியில் அதிக நேரம் செலவிடுதலை கட்டுப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களுடன் அவ்வப்போது தொடர்புகொண்டு நலம் விசாரிப்பதை வழங்கமாகக் கொள்ளவும்.