நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவாரம் பூ கருப்பட்டி தேநீர்

தேவையான பொருட்கள்:

ஆவாரம்பூ பொடி – ஒன்றரை டீஸ்பூன் (காயவைத்து அரைத்துக்கொள்ளவும்)

இஞ்சி – சிறிய துண்டு ஒன்று
கருப்பட்டி – சிறிய துண்டு
மிளகு அரை – டீஸ்பூன்
தண்ணீர் – ஒரு கப்
ஏலக்காய் – 2

செய்முறை :

ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் இஞ்சி, ஆவராம் பொடி கலவையைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

நிறம் மாறியதும் இறக்கி வடிகட்டி குடிக்கவும்.