‘பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பம்’ : இன்று மாலை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 5 ஆவது சீசன் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். தமிழில் கடந்த 4 ஆண்டுகளாக விஜய் டிவியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.உலக நாயகன் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் சீசன் 1 மற்றும் 3 சூப்பர் ஹிட்டடித்தமை யாவரும் அறிந்ததே. நான்காவது சீசன் கொரோனா காலக் கட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழலில், பிக்பாஸ் 5 ஆவது சீசன் அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் அதற்கான புரோமோ சூட்டிங்கை கமல்ஹாசன் முடித்துவிட்டதாகவும் அண்மையில் தகவல்கள் கசிந்து இணையத்தில் வெளியாகின. விஜய் டிவியை சேர்ந்தவர்கள் சிலர் புரோமோவின் புகைப்படங்கள் சிலவற்றையும் வெளியிட்டும் இருந்தனர். இந்த நிலையில், 5ஆவது சீசன் வரும் அக்டோபர் 3 ஆம் திகதி முதல் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதாகவும் நம்ப தகுந்த வட்டராங்களில் தகவல் வெளியாகின்றன.

இதை குறிப்பால் உணர்த்தும் விதமாக விஜய் டிவியின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மியூட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்து 5.55 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது.