பிக்பாஸ் வீட்டில் நடிகை சனம் ஷெட்டியிடம் எல்லை மீறினாரா வேல்முருகன்- எழுந்த சர்ச்சை

பிக்பாஸ் 4வது சீசன் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்று (அக்டோபர் 15) புதிய போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்தார்.

அவர் நுழைந்ததுமே போட்டியாளர்களுக்கு மோசமான பட்டங்களாக கொடுத்தார், போட்டியாளர்களும் அதனால் கொஞ்சம் கடுப்பானார்கள்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஒரு விஷயம் இப்போது சர்ச்சையாக பேசப்படுகிறது. ஒரு டாஸ்கில் வேல்முருகன்-சனம் ஷெட்டி இணைந்து போட்டியை வென்றார்கள்.

இதனால் கொண்டாட்டம் தாங்க முடியாமல் தனது கூட்டணி நபர் சனம் ஷெட்டியை கட்டிபிடித்ததோடு அவரை தூக்கி சுற்றியுள்ளார் வேல்முருகன்.

அவர் நடிகையை கட்டிப்பிடித்து எல்லை மீறிவிட்டார் என பேசப்படுகிறது. ஆனால் வேல்முருகன் சனம் ஷெட்டியை தங்கை என்று அழைக்கிறார், வீட்டிலும் எல்லோரிடமும் நல்ல முறையிலேயே பழகுகிறார்.

அந்த ஒரு விஷயம் அவரது மகிழ்ச்சியின் வெளிப்பாடு என சிலர் கூறி வருகின்றனர்.