பிக் பாஸ் அப்டேட்: முதல் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த VJ அர்ச்சனா!

பிக் பாஸ் வீட்டில் தற்போது மொத்தம் 16 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அதில் பலரும் நன்கு பரிட்சயமான முகங்கள் தான் என்றாலும், அவர்களுக்குள்ளும் நடுவில் வரும் சண்டை சச்சரவுகள் காரணமாக பிக் பாஸ் மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது பரபரப்பை மேலும் கூட்ட ஒரு வைல்டு கார்டு என்ட்ரியை கொண்டு வந்திருக்கிறார்கள். பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் புதுவரவாக நுழைந்திருக்கிறார். அவரை பார்த்து மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஆச்சர்யம் அடைந்து உள்ளனர். இது இன்று காலை வெளியிடப்பட்ட புது ப்ரோமோவில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

தனியார் தொலைக்காட்சியின் பேச்சுவார்த்தைக்கு பிறகு அர்ச்சனா தற்போது ஒருவழியாக பிக் பாஸ் வீட்டுக்கு வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்து சேர்ந்திருக்கிறார். கடந்த சில தினங்களாக அர்ச்சனா தனிமை படுத்தப்பட்டு இருக்கிறார் என செய்திகள் வந்த நிலையில் தற்போது பிக் பாஸில் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி இவர்கிறார்.

பிக் பாஸ் கேம் அவரால் இன்னும் சூடு பிடிக்குமா என்பது இன்னும் சிறிது நாட்களில் தெரிய வரும்.