திடீரென டுவிட்டரில் ட்ரெண்ட் ஆன லொஸ்லியா

விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 3 இல் இலங்கை நாட்டை சேர்ந்த லொஸ்லியா கலந்துக்கொண்டு பிரபலமானவை யாவரும் அறிந்த உண்மை.

இவரின் தந்தை கடந்த வருடம் மரணமடைந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் பெரிதாக எவ்விதமான பதிவுகளும் அவர் பதிவேற்றம் செய்திருக்கவில்லை.

இந்நிலையில் இன்று அவரின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டெகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்த புகைப்படத்தொகுப்பில் “ஒரு நாள் எனது செயல்கள் பேசும்” என்று பதிவுடன் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவரின் ரசிகர்கள் இந்தியளவில் #WelcomeBackLosliya என்ற ஹாஸ்டேக்கினை வைரல் பண்ணி வருகின்றனர்.

இதுவரையில் கிட்டத்தட்ட 47 ஆயிரம் தடவை குறித்த ஹாஸ்டேக்கினை பயன்படுத்தி டுவிட் பதிவுகள் டுவிட்டரில் பதியப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்துள்ளது.

 

x