மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். கடந்தாண்டு ஏப்ரல் மாதமே ரிலீசாக வேண்டிய இப்படம், கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப்போனது. சுமார் 9 மாதங்களுக்கு பின் தற்போது பொங்கலை முன்னிட்டு இப்படம் நேற்று முன்தினம் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலையும் குவித்து வருகிறது.

இந்நிலையில், பொங்கல் வாழ்த்து தெரிவித்து மாஸ்டர் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் விஜய் உற்சாகமாக பொங்கல் கொண்டாடிய வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் நடிகர் விஜய் வேட்டி சட்டை அணிந்தபடி கலந்துகொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

x