ஆஸ்கர் விருது விழா மீண்டும் தள்ளி வைப்பு

உலகின் உயரிய சினிமா விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, ஒவ்வொரு ஆண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும். அந்த மேடை ஏறி விருது வாங்கி விட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு சினிமா கலைஞனின் அதிகபட்ச கனவு.

93 ஆவது ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சிகள் அடுத்த வருடம் பிப்ரவரி 28 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பிரச்சினை முடிவுக்கு வராத காரணத்தால் ஆஸ்கர் விருது விழா, இரண்டு மாதங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் நடக்கும் என்று ஆஸ்கர் விருது குழு அறிவித்துள்ளது. விருது தேர்வுக்கான படங்களை சமர்பிக்கும் காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.