சோழன் பயணம் தொடரும்… ஆயிரத்தில் ஒருவன் ரீ-ரிலீஸ் குறித்து செல்வராகவன் நெகிழ்ச்சி

12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது. தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது, ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். நாளை இப்படத்தை தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர்.  இதுகுறித்து டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள செல்வராகவன், ‘உங்கள் ஆதரவுக்கு என்றும் கடமைப் பட்டிருக்கிறேன். இதோ ! மீண்டும் ஆயிரத்தில் ஒருவன். டிசம்பர் 31, 2020 முதல். “ சோழன் பயணம் தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதுப்பேட்டை படமும் நாளை ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/selvaraghavan/status/1344160058892898304
x