2020-ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. கொரோனா தாக்கம் ஒருபுறம் இருந்தாலும், பிரபலங்களின் எதிர்பாராத மரணங்கள் மற்ற ஆண்டுகளை விட இந்தாண்டு சற்று அதிகம் என்றே கூறலாம். அந்தவகையில், சேதுராமன், எஸ்.பி.பி., வடிவேல் பாலாஜி, சித்ரா, தவசி என பலரின் மரணங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது பிரபல டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்சாண்டர் மரணமடைந்துள்ளார்.
Related Posts
உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48. கடந்த 10 ஆண்டுகளாக டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்த இவர், தமிழில் கோலமாவு கோகிலா, பிகில், மாநகரம், கைதி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.