கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை நார்தன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தின் தமிழ் ரீமேக்கையும் அவரே இயக்கி வந்தார். தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடித்தனர். விறுவிறுப்பாக முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், சிம்புவுக்கும், தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடுத்தகட்ட படப்பிடிப்பு நடத்தாமல் கிடப்பில் போட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, படத்துக்கு ‘பத்து தல’ என பெயரிட்டிருப்பதாகவும், சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என். கிருஷ்ணா இப்படத்தை இயக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
Related Posts

இந்நிலையில், இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் கிருஷ்ணா, ஏ.ஆர்.ரகுமானின் நெருங்கிய நண்பர் என்பதால் இப்படத்துக்கு அவர் இசையமைக்க ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கிருஷ்ணா இயக்கிய சில்லுனு ஒரு காதல் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.