இலங்கை கலைஞர்களின் படைப்பிற்கு நடனமாடிய பிரியங்கா

உலகம் முழுவது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டும் வழமை நிலைக்கு மாறி வருகின்ற நிலையில், நேற்று முன்தினம் 13 ஆவது ஐ.பி.எல் போட்டி ஆரம்பமாகியது.

குறித்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முப்பை இந்தியனஸ் அணியும் மோதி கொண்டன. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில், விஜய் டிவி தொகுப்பாளரான பிரியங்கா அவரது இன்ஸ்டெகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ வைரல் ஆகியுள்ளது.

இந்தியாவில் டிக்டொக் தடைசெய்யப்பட்டதன் பின்னர், சமீபத்தில் இன்ஸ்டெகிராம் டிக்டொக்கினை ஒத்த புதிய ஒரு வசதியினை அறிமுகம் செய்திருந்தது.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆதரித்து பிரியங்க ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

குறி்த்த பாடல் இலங்கை கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.ரௌத்திரன் என்ற இலங்கை சேர்ந்த இசைகுழுவின் இசையமைப்பாளரான யஜீவன் குறித்த பாடலினை இசையமைத்து அவரே பாடியுள்ளார்.  குறித்த பாடலில் வரும் சொல்லிசையினை எஸ்.ஜி.பிரபு பாடியுள்ளார். மேலும் இந்த பாடலின் ஒலி கலவையினை பிரேம் ராஜ் செய்துள்ளதோடு, குறித்த பாடலின் படப்பிடிப்பினை பிரவீன் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.