2020 ஆம் ஆண்டு நடைபெற்ற திரை நட்சத்திரங்களின் திருமணங்கள்

2020 ஆம் ஆண்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பலரின் வாழ்வாதாரம் முடங்கியது. குறிப்பாக சினிமா தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கொரோனா காரணங்களால் பல பிரபலங்களின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. பல முக்கிய பிரபலங்களின் திருமணங்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் நடந்தது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்களின் பட்டியல் பின்வருமாறு…

மகத்
மகத் – பிராச்சி மிஸ்ரா
அஜித்துடன் மங்காத்தா, விஜய்யுடன் ஜில்லா படங்களில் நடித்தவர் மகத். மேலும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர்,2012 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிம்பு மற்றும் அனிருத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
யோகி பாபு
யோகிபாபு – மஞ்சு பார்கவி
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ஆரணியில் உள்ள யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.
அஸ்வின் ராஜா
அஸ்வின் ராஜா – வித்யாஸ்ரீ
கும்கி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் நகைச்சுவை நடிகர் அஸ்வின் ராஜா. இவர் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி தனது காதலியான வித்யாஸ்ரீயை திருமணம்செய்து கொண்டார். கொரோனா பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்த நேரத்தில் காமெடி நடிகர் அஸ்வின் ராஜாவின் திருமணம் எளிமையாக நடைபெற்றது.
நிதின்
நிதின் – ஷாலினி
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நிதின். இவருக்கும் ஷாலினி என்ற பெண்ணுக்கும் துபாயில் ஏப்ரல் 15ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. கொரோனா ஊரடங்கால் திருமணம் தள்ளி போனது. பின்னர், ஜூலை 26 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிதின் – ஷாலினி திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ராணா
ராணா – மிஹீகா
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல நடிகராக இருப்பவர் ராணா. 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார். இவர் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி மிஹீகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கொரோனா காலம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
ஆரவ்
ஆரவ் – ராஹி
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு வெற்றி பெற்றவர் ஆரவ். இவர் ஓ காதல் கண்மணி மற்றும் சைத்தான் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். செப்டம்பர் 6 ஆம் தேதி ராஹி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். ராஹி, கவுதம் மேனன் இயக்கிவரும் ஜோஷ்வா என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
மியா ஜார்ஜ்
மியா ஜார்ஜ் – அஷ்வின் ஃபிலிப்
 2014-ம் ஆண்டு ‘அமர காவியம்’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் மியா ஜார்ஜ். அதை தொடர்ந்து இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து, வெற்றி வேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவர் அஷ்வின் ஃபிலிப் என்ற தொழில் அதிபரை கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
ஆர்கே சுரேஷ்
ஆர்கே சுரேஷ் – மது
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஆர்கே சுரேஷ். இவர் சினிமா பைனான்சியரான மது என்பவரை கடந்த அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். தங்களின் திருமணத்தை சில நாட்களுக்கு பிறகு நடிகர் ஆர் கே சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் அக்டோபர் 21 ஆம் தேதி அறிவித்தார்.
பாக்யராஜ் கண்ணன்
பாக்கியராஜ் கண்ணன் – ஆஜா 
சிவகார்த்திகேயன் நடித்த, ரெமோ, கார்த்தி நடிப்பில், விரைவில் வெளியாக உள்ள,சுல்தான் படங்களை இயக்கியவர், பாக்கியராஜ் கண்ணன். இவருக்கும், ஆஜா என்பவருக்கும் அக்டோபர் 26 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் – கவுதம் கிட்சிலு
தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. காஜல் அகர்வாலுக்கு தொழிலதிபரான கவுதம் கிட்சிலுவுடன் அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. கொரோனா காலம் என்பதால் இருவீட்டார் மட்டுமே கலந்துக்கொண்டனர்.
சனா கான்
சனா கான் – முஃப்தி அனஸ்
தமிழில் சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சனா கான். அதற்குப் பிறகு ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘பயணம்’, ‘ஆயிரம் விளக்கு’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். நடிகை சனா கானுக்கு குஜராத் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான முஃப்தி அனஸ் என்பவருக்கும் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
நிகாரிகா
நிஹாரிகா- சைத்தன்யா
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நிஹாரிகா. தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திராவின் மகளான நிஹாரிகா தமிழில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இவர் ஹைதராபாத்தை சேர்ந்த மென்பொறியாளர் சைத்தன்யாவை டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி உதய்ப்பூரில் உள்ள அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார்.
x