மிரட்டலான தோற்றத்தில் விக்ரம்… வைரலாகும் கோப்ரா செகண்ட் லுக் போஸ்டர்

விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப்ரா.  அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லலித் குமார் தயாரித்துள்ளார்.
கோப்ரா படத்துக்காக விக்ரம் முழுமையாக தனது தோற்றத்தை மாற்றி உள்ளார். இதில் 15 தோற்றங்களில் அவர் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கோப்ரா செகண்ட் லுக் போஸ்டர்
இந்நிலையில், கோப்ரா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை கிறிஸ்துமஸ் தினமான இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் விக்ரமின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. இது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்து உள்ளது.