ஹீரோயினாக அறிமுகமாகும் தர்ஷா குப்தா

மோகன் ஜி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘திரெளபதி’. ரிச்சர்டு ரிஷி நாயகனாக நடித்திருந்த இப்படம் நாடக காதல், ஆணவக்கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது.
இதனிடையே மோகன் ஜி இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதன்படி தனது அடுத்த படத்திற்கு ‘ருத்ர தாண்டவம்’ என பெயரிட்டிருப்பதாகவும், ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி தான் இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
ருத்ர தாண்டவம்
இந்நிலையில், இப்படத்தின் ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி. சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் நடிகை தர்ஷா குப்தா, இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.